இம்ரானின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட விசம் : எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு
தற்போது சிறைதண்டனைக்கு உள்ளாகியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான புஸ்ரா பீபீக்கு விசம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவரது கணவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அரச விருதுகளை சட்டரீதியற்ற வகையில் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தி இம்ரான் கானும் அவரின் மனைவியும் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் துணைச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள அவர்களது தனிப்பட்ட இல்லத்தில் புஸ்ரா பீபீ அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு விசம் கொடுக்கப்பட்டதாக இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவு
இந்தநிலையில் அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், பாகிஸ்தான் இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அசிம் முனீரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை தொடர்பான விரிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கழிவறை சுத்தம் செய்யும் இரசாயனத்தின் மூன்று துளிகள் தனது உணவில் சேர்க்கப்பட்டதால், தனது உடல்நிலை மோசமடைந்ததாக புஸ்ரா பீபீ கூறினார்.
இதன் காரணமாக கண்கள், மார்பு மற்றும் வயிற்று வலி உட்பட்ட பல உபாதைகளுக்கு தாம் உட்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam