இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை
தற்போதைய தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மத்திய நிலையம் என்பது மாணவர்களுக்கு புதிய அறிவை தேடுவதற்குத் தேவையான ஒரு வளமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பீ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்துப் பேசும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செல்வந்த மற்றும் வறிய நாடுகளுக்கு இடையில் வருமானத்தில் இடைவெளி இருப்பதைப் போல டிஜிட்டல் துறையிலும் இடைவெளி காணப்படுகிறது.
இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை விருத்தி செய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். இதற்காக அரசாங்கம் பல வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டில் தனியார் துறையின் ஒத்துழைப்பும்
அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
