பிரித்தானியாவில் 96 வயது மூதாட்டிக்கு சிறை தண்டனை
பிரித்தானியாவில் (UK) 96 வயது மூதாட்டி ஒருவருக்கு விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா - மெர்சிசைட்டின் ஐன்ஸ்டேல் பகுதியை சேர்ந்த ஜூன் மில்ஸ் (June Mills) என்ற 96 வயது மூதாட்டிக்கே குறித்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் விபத்து ஏற்படுத்தி பாதசாரி ஒருவரின் உயிரிழப்புக்கு தான் காரணமாக இருந்ததை அந்த மூதாட்டி ஒப்புக் கொண்டுள்ளார்.
விபத்து சம்பவம்
கடந்த ஓகஸ்ட் மாதம் பிரெண்டா ஜாய்ஸ் (Brenda Joyce) என்ற 76 வயது முதியவரின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்றே தன் மீதான மூதாட்டி குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த மூதாட்டி, தன்னுடைய காரை நடைபாதை மீது செலுத்தியுள்ள நிலையில், 76 வயது முதியவர் மற்றும் 80 வயது பெண் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 76 வயதானவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் சிக்கிய மற்றொரு நபரான 80 வயது பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையிலேயே, இந்த விபத்தினை ஏற்படுத்தி குறித்த நபரின் உயிரிழப்புக்கு தானே காரணமாக இருந்துள்ளதாக மூதாட்டி ஒப்புக் கொண்டுள்ள நிலையிலேயே 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |