இறக்குமதியாளர்கள் ஒரு டொலருக்கு 201 ரூபாய் செலுத்த நேரிட்டுள்ளது! ஹர்ச டி சில்வா
சீனா இலங்கைக்கு கடன் வழங்கினாலும் அதனை தனது நாணயமான யுவான்களில் வழங்குவதாகவும், டொலர்களில் வழங்குவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் கடனை திரும்ப செலுத்தும் போது, அதனை டொலர்களில் சீனாவுக்கு செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் தற்போது கடும் தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது. வங்கிகளில் டொலர்கள் கொள்வனவு செய்யப்படுவது குறைந்துள்ளது.
600 மில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கிடைக்கவுள்ளதாக கூறினர். அதுவும் இன்னும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் இருந்து கிடைக்கும் என்றனர். அதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அரசாங்கம் மிகப் பெரிய டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளது.
சீனா யுவான் மூலமே நாட்டுக்கு கடனை வழங்குகிறது. எமக்கு டொலர்களே தேவைப்படுகின்றன. இதனால், சீனா வழங்கும் யுவானை டொலராக மாற்ற அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது.
டொலர் மூலமே கடனை திரும்ப செலுத்த வேண்டும். கடனை செலுத்த மாத்திரம் 7 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் ஊடாக அவசரமான விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு அந்நிய செலாவணி உடன்படிக்கைகளை வங்கிகள் கையெழுத்திட முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.
கஷ்டப்பட்டு அனுமதிப்பத்திரங்களை பெற்று இறக்குமதியாளர்கள் பொருட்களை இறக்குதி செய்கின்றனர். ஒரு டொலர் விலை 185 ரூபாய் என கப்ரால் நாடாளுமன்றத்தில் பெரிதாக கூறினார்.
எனினும் இறக்குமதியாளர்கள் ஒரு டொலருக்கு 201 ரூபாய் செலுத்த நேரிட்டுள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam