93000 மெற்றிக் தொன் இரசாயன பசளை இறக்குமதி
இரசாயன பசளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர், பொட்டாசியம் குளோரைட் உட்பட 93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே (Chandana Lokuhewage) தெரிவித்துள்ளார்.
62 ஆயிரம் மெற்றிக் தொன் பொட்டாசியம் குளோரைட், 31 ஆயிரம் மெற்றிக் தொன் தேயிலை பசளை, 752 மெற்றிக் தொன் காய்கறி மற்றும் மலர் பயிர் செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பசளை என்பன இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரத்து 500 மெற்றிக் தொன் யூரியா, 2 ஆயிரத்து மெற்றி தொன் நேரடியாக பயன்படுத்தப்படும் பசளை ரகங்கள், 913 மெற்றிக் தொன் கலப்பு பசளை என்பவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் லொக்குஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரசாயன பசளைகளுக்கு தடைவிதிக்க அரசாங்கம் முடிவு செய்தது. எனினும் கமத்தொழிலாளர்கள் உட்பட பயிர் செய்கையாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உணவு உற்பத்திகள் குறைந்ததை அடுத்தும், தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.