இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் சுகாதார தரப்பினர் நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.
புதிய திரிபடைந்த கோவிட் வைரஸ் தொற்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுடனான தொடர்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளின் கீழ் நாட்டுக்குள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், சில பொது மக்கள் அவர்களுடன் தொடர்பு பேண முயற்சிப்பதாகவும் இது ஆபத்தானது எனவும் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில சுற்றுலாத் தளங்களுக்கு பயணம் செய்யும் சில உள்நாட்டு பொது மக்கள் வெளிநாட்டு பயணிகளின் அருகாமையில் செல்லக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.