லண்டனில் இளைஞர், யுவதிகள் உட்பட பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
லண்டனில் இளைஞர், யுவதிகள் உட்பட பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரிடம் பணமோசடி மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுந்தகவல்
இவ்வாறானவர்களின் கையடக்க தொலைபேசிக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி குறுந்தகவலொன்றை மோசடியாளர்கள் அனுப்புவதாக கூறப்படுகிறது.
அதில், வாரந்த சம்பளம் 980 பவுண்ட்களுக்கு இணையவழி வேலை வாய்ப்பு காணப்படுவதாகவும், வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றும், முன் அனுபவங்கள் தேவையில்லை என கூறப்படுவதுடன், விரும்பம் உள்ளவர்கள் இணைப்பை அழுத்துமாறு கூறி குறுந்தகவலுடன் இணைப்பு ஒன்றும் உள்ளடக்கப்படுகின்றது.
பணமோசடி
இந்த நிலையில் இணைப்பை அழுத்துபவர்களிடம் குறிப்பிட்ட பணத்தொகையை செலுத்துமாறு கோரப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு பணம் பறிக்கும் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
