2009இன் இறுதி யுத்த காணொளியை அநுரவுக்கு வழங்க தயார்: சவால் விடுத்த முக்கிய புள்ளி
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய காணொளிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்க தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
இந்நிலையில், அநுர அரசாங்கம் தொடர்பில் தமிழ் புலம்பெயர் சமூகத்தில் இருந்து சில எதிர்வாத கருத்துக்கள் வெளிப்பட்டாலும், ஜனநாயக முறையில் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஆதரவை அந்த மக்கள் வெளிப்படுத்த தயாராக உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறான காணொளிகளின் மீது சர்வதேசத்தின் அழுத்தங்கள் காணப்படுவதாகவும் அதனால் அதில் பெரும்பாலான காணொளிகளை வெளிப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலவுவதாகவும், நேரு குணரட்னம் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |