பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்: வெளியான முக்கிய அறிவிப்பு
உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகளின் அடிப்படையில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் கோரவுள்ளது.
3 வார கால அவகாசம்
இந்த விண்ணப்பங்கள் 3 வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பக் கையேடு விரைவில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்களுக்கு 3 வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு/போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக, விரிவுரைகளை இணையவழியில் (Online) நடத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.