முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்குமாறு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 28 அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒப்படைக்கும் போது, மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண மிகுதிகளை செலுத்துவது கட்டாயம் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட பின்னரே அரச குடியிருப்புகளை கையகப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சின் அறிவிப்பை தொடர்ந்தும் தவிர்க்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்குவதில் செலவினங்களை குறைக்கும் வகையில் அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்து புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam