இன்று மூடப்படும் வீதி! பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கொழும்பு வீதியொன்று மூடப்படுவது தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்தினால் நிலத்தடி நீர் குழாய் அமைப்பொன்று அமைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று வழி தொடர்பான விபரங்கள்
இதற்கமைய, கொழும்பிற்கு செல்லும் வாகனங்கள் அவிசாவளை வீதியின் கொடிகாவத்தை சந்தியில் இடது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் கொலன்னாவை ஊடாக தெமடகொடை நோக்கி பயணிக்க முடியும்.
மேலும், கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்கள் தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை சந்தியில் வலது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் இடது பக்கமாக திரும்பி கொடிகாவத்தை நகரில் வலது பக்கமாக திரும்பி அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும்.
தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் இடது பக்கமாக திரும்பி மீதொடுமுல்லை வீதி ஊடாக மீண்டும் அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
