கொரியாவில் பணியாற்றி நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
பத்து வருடங்களுக்கு மேலாக கொரியாவில் பணியாற்றி நாடு திரும்பிய இலங்கைபணியாளர்களுக்கு 'E7 விசா வசதி' வழங்குவது குறித்து கொரிய அரசாங்கம், கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான கொரிய தூதுவர் Santhush Wonjin Jeong உறுதியளித்துள்ளார்.
E-7 விசா வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை,பணி காலத்தில் கொரியாவுக்கு அழைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங்கன்ட், இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இன்று அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு
கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது மற்றும் இலங்கை பணியாளர்களுக்கு சர்வதேச மட்ட தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, கொரியாவின் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பத்துறை வல்லுனர்களால், இலங்கையில் பாடசாலை படிப்பை முடித்து வேலை
தேடும் இளைஞர்,யுவதிகளுக்கான பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான
நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan