நுணாவில் ஐ.ஓ.சியில் எரிபொருள் விநியோகம்! நேரம் தொடர்பான தகவல் வெளியானது
இதற்கமைய,சாவகச்சேரி - நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு கியூ.ஆர்.கோட் அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கிராம அலுவலர்கள் பெட்ரோலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கீழ் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம அலுவலர்கள் குறிக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகிக்கப்படும் நேரம்
நெடுந்தீவு 09.00.am- 09.30 am
வேலணை 09.30 am - 10.00 am
காரைநகர் 10.00 am - 10.30 am
ஊர்காவற்துறை 10.30 am - 11.00 am
யாழ்ப்பாணம் , நல்லூர் 11.00 am - 11.30 am
சண்டிலிப்பாய் , சங்கானை , உடுவில் 11.30 am - 12.00 pm
தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி 12.00 pm - 12.30 pm
கரவெட்டி , பருத்திதிதுறை , மருதங்கேணி 12.30 pm - 01.00 pm வரை பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam