இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயத்தின் உச்ச வரம்பு
அதன்படி இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை கூறியுள்ளது.
இதேவேளை கடந்த மே மாதம் 19ஆம் திகதி வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு மத்திய வங்கிய முக்கிய அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
அதன்படி, இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருவார கால அவகாசம்: இலங்கையர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு |
அத்துடன் மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக் கணக்கில் வைப்புச் செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும்.
எனினும் மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பொது மன்னிப்பு காலம்
இந்த நிலையில் தற்போது ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமன்னிப்புக் காலப்பகுதியின் இறுதியில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.