வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
புதிய வசதிகள் தொடர்பில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் செயலி அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழமையான விடயமாகும்.
அதன்படி,கடந்த முறை வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வாட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு
இந்த புதிய முறை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam