காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மாத்திரமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என வைத்திய ஆலோசகரான வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotic) உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்ற பின்னர் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் குறுகிய கால காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள்.
சாதாரண காய்ச்சலுக்கு படுக்கை ஓய்வு சிறந்த தீர்வாகும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நீரிழப்பு தவிர்க்க போதுமான அளவு திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
பரசிட்டமோல் தேவைக்கேற்ப உட்கொள்ள வேண்டும். ஒரு நபர் அதிகப்படியான சளியால் அவதிப்பட்டால், அவர்கள் நாசி சொட்டுகளைப் பெறலாம்.
ஒரு நபருக்கு மூச்சுத்திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், இன்ஹேலரை பரிந்துரைக்கலாம்.
கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் பக்டீரியா தொற்று ஏற்பட்டால் மாத்திரமே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotic) பரிந்துரைக்கப்படும்.
அறிகுறிகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் மருந்து தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
