இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்களுக்கு அரசாங்கம் 26.6 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசியை வழங்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போஷாக்கு நிலையை உயர்த்துவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி வழங்கும் வேலைத்திட்டம்
கொழும்பு மாவட்டத்தில் 183,421 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும், தேவையான அரிசி இருப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கமைய, 25 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் இரண்டாம் சுற்று அரிசி விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |