வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்
அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீரழிந்த அரசியல் கலாசாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன்.
அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது.
நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர்.
இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |