வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு
போலாந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைதீவு பேன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்

இவ்வாறான நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பண மோசடி செய்யும் நபர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக மேற்கூறிய நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு பணத்தை பெற்றுக்கொள்வதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பணத்தை செலுத்தும் முன்னர் செய்ய வேண்டிய முக்கிய விடயம்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக நபர் அல்லது நிறுவனத்திடம் கடவுச்சீட்டு அல்லது பணத்தை கொடுக்கும் முன்னர், அந்த நிறுவனம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் சட்ட ரீதியான அனுமதியை பெற்ற நிறுவனமா என்பதை தேடி அறியுமாறும் பணியகம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளம் அல்லது பணியகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையத்தின் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சட்ட ரீதியான தன்மையை பற்றி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி ஏமாற்றும் நபர்கள் பற்றிய தகவல் இருக்குமாயின் அதனை வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவிடம் வழங்குமாறும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.( விசேட விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கம் 0112864241)
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri