பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான முக்கிய செய்தி!
இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி சான்றிதழ் மற்றும் புறப்படுவதற்கு முன்னரான பீ.சீ.ஆர் பரிசோதனை என்பனவற்றின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்தல் தொடர்பிலான சுகாதார நெறிமுறைகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமைச்சின் இணைய தளத்தில் இந்த விபரங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். குறுகிய கால அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசிப்பது குறித்த தகுதிகள் மாற்றமடையலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளுர் அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் நபர்கள் தேசிய சுகாதார சேவை (NHS) பரிசோதனை வசதிகளை பயன்படுத்த முடியாது எனவும் தனியார் துறையினரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் பயணிகள் கரையோரங்கள் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு பகுதிக்குள்ளும் பிரவேசிக்க அனுமதி கிடையாது. சிறுவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள், சுற்றுலாப் பயணிகளான பெற்றோருடன் 12 வயதுக்கும் குறைந்தவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகளின் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 12 முதல் 18 வயதான பிள்ளைகள் முதல் நாளில் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்றுக்கொண்ட ஆய்வு கூடத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தல் ஹோட்டல் அல்லது பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட லெவல் 1 ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்படுவர். முதல் நான் பீ.சீ.ஆர் பரிசோதனை எதிர்மறையானது என்றால் அவ்வாறானவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவர்.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பெற்றோருடன் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். இவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக மாட்டார்கள்.
12 முதல் 18 வயதுகளை உடையவர்கள் குறைந்தபட்சம் பைசர் தடுப்பூசி ஒரு மாத்திரையை ஏற்றிக் கொண்டிருந்தால் (பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக) அது முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டதாக கருதப்படுவர்.