சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட கூட்டம் இன்று (22) கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பராமரிப்பு கட்டணம்
குறித்த விடயம் தொடர்பில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு கிடைக்கும் தரகு தொகையில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க கூட்டுத்தாபனம் தயாராக வருகின்றது.
இதனால் சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இது தொடர்பில் இன்று விரிவாக கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் கபில நாவுடுன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |