நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக யாழ். மாநகர சபையில் முக்கிய சந்திப்பு
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தைப் புனரமைத்தலும், அங்கு நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற செயற்றிட்டத்துக்கு அமைவாக, நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான சந்திப்பு யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு நிகழ்விலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனால் நாவலர் கலாசார மண்டபம் இந்து சமய, கலாசார அலுவல்கள் தினைக்கத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள், யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டது.
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாகச் சுமுகமான முறையிலே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு சேர்ந்து நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, சபையினரோடு கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர சபை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா, பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம், யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் தயானந்தராஜா, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர், விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
