இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Amal Nov 20, 2025 12:55 AM GMT
Report

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ், இந்த நிறுவனங்கள் அனைத்தும் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடுகின்றன என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.

நாமலின் சட்டப் பட்டம் : புகழ்பெற்ற கல்வி வலைத்தளத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாமலின் சட்டப் பட்டம் : புகழ்பெற்ற கல்வி வலைத்தளத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள்

புதிதாக உறுதி செய்யப்பட்ட “SGO/sgomine.com” உட்பட, 23 நிறுவனங்கள்/செயலிகள்/குழுக்கள் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் | Important Issued By The Central Bank Of Sri Lanka

இந்த நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டவை என்பதால், பொதுமக்களை அவற்றில் முதலீடு செய்வதில் இருந்தோ அல்லது நிதியியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்தோ விலகி இருக்குமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பெயர்கள்

1. SGO/sgomine.com

2. டியன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (தனியார்) லிமிடெட் (Tiens Lanka Health Care (Pvt) Ltd)

3. பெஸ்ட் லைஃப் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Best Life International (Pvt) Ltd)

4. மார்க் – வோ இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Mark – Wo International (Pvt) Ltd)

5. வி எம் எல் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (V M L International (Pvt) Ltd)

6. குளோபல் லைஃப்ஸ்டைல் லங்கா (தனியார்) லிமிடெட் (Global Lifestyle Lanka (Pvt) Ltd)

7. ஃபாஸ்ட் 3 சைக்கிள் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Fast3Cycle International (Pvt) Ltd)

8. ஸ்போர்ட் செயின் செயலி, ஸ்போர்ட் செயின் இசெட்எஸ் சொசைட்டி இலங்கை (Sport Chain app, Sport Chain zs society Sri Lanka)

9. ஓன்மேக்ஸ் டிடி (OnmaxDT)

10. எம்டிஎஃப்இ செயலி, எம்டிஎஃப்இ எஸ்எல் குழுமம், எம்டிஎஃப்இ சக்சஸ் லங்கா, எம்டிஎஃப்இ டிஎஸ்சிசி குழுமம் (MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group)

11. ஃபாஸ்ட்வின் (தனியார்) லிமிடெட் (Fastwin (Pvt) Ltd)

12. ஃப்ரூகோ ஒலைன் செயலி/ ஃப்ரூகோ ஒலைன் (தனியார்) லிமிடெட் (Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd)

13. ரைட் டு த்ரீ ஃப்ரீடம் (தனியார்) லிமிடெட் (Ride to Three Freedom (Pvt) Ltd)

14. க்யூநெட்/ குவெஸ்ட்நெட் (Qnet/ Questnet)

15. ஈரா மிராக்கிள் (தனியார்) லிமிடெட் மற்றும் ஜெனிசிஸ் பிசினஸ் ஸ்கூல் (Era Miracle (Pvt) Ltd. And Genesis Business School) 16. லெட்ஜர் பிளாக் (Ledger Block)

17. பீகாயின் செயலி மற்றும் சன்பேர்ட் ஃபௌண்டேஷன் (Beecoin App and Sunbird Foundation)

18. வின்டெக்ஸ் டிரேடிங் (Windex Trading)

19. தி என்ரிச் லைஃப் (தனியார்) லிமிடெட் (The Enrich Life (Pvt) Ltd)

20. ஸ்மார்ட் வின் என்ட்ரபிரனர் (தனியார்) லிமிடெட் (Smart Win Entrepreneur (Pvt) Ltd)

21. நெட் ஃபோர் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட்./ நெட்ரிக்ஸ் (Net Fore International (Pvt) Ltd./ Netrrix)

22. புரோ கேர் (தனியார்) லிமிடெட்., ஷேட் ஒஃப் புரோகேர் (தனியார்) லிமிடெட் (Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd) மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை ஆரம்பிப்பது, விளம்பரப்படுத்துவது, நிதியளிப்பது அல்லது நிர்வகிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொதுமக்கள் தமது பணத்தை இத்தகைய சட்டவிரோத திட்டங்களில் முதலீடு செய்து இழப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனக்கு அவ்வளவு பயமா..! எதிர்த்தரப்பை கேலி செய்த அர்ச்சுனா

எனக்கு அவ்வளவு பயமா..! எதிர்த்தரப்பை கேலி செய்த அர்ச்சுனா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US