இரட்டை பிரஜா உரிமை பெற்ற எம்.பிக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு தகவல் அறியும் ஆணைக்குழு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அடுத்தகட்ட நடவடிக்கை
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ள உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்குமாக இருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம்.
இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்த மேன்முறையீடு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் குறித்த அதிகாரிகளால் வழங்கப்படும் பதிலுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்துடன் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாட்டில் இருப்பது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் அவர்கள் நாட்டில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் பதவி வகிப்பது பொருத்தமில்லை. அது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பாகவும் அமையும். நாட்டில் சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் இவர்கள் பூரண நம்பிக்கையுடன் செயற்படுவார்களா என்ற சந்தேகம் எழுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan