முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்தியோருக்கான முக்கிய தகவல்: செய்திகளின் தொகுப்பு(Video)
கோவிட் தடுப்பூசிகள் மூன்றையும் பெற்றுக் கொண்டுள்ள நபர் கோவிட் தொற்றுக்குள்ளானால் அவர்களால் மற்றவர்களுக்கு கோவிட் தொற்றும் வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் நதீக ஜானகே தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர், கோவிட் தொற்றுக்குள்ளான ஏழு நாட்களுக்குப் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கவும், தினசரி கடமைகளைச் செய்யவும் அனுமதிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,