இராணுவத் தளபதி வெளியிட்ட முக்கிய தகவல்! - செய்திகளின் தொகுப்பு
உயர்கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே மொடர்னா அல்லது பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வா மேலும் கூறுகையில்,
''உள்ளூரில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த தடுப்பூசிகளைக் கோரும் எவரும் தங்கள் வெளிநாட்டு கல்வி தொடர்பான ஆவண சான்றுகளை வழங்குவது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.
நேற்றையதினம், உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் நாரஹேன்பிட்டவில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக திரண்டு மொடர்னா தடுப்பூசி கேட்டு இராணுவத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
மொடர்னா தடுப்பூசி தங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் தெரிவித்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ வைத்தியசாலைகளில் மொடர்னா தடுப்பூசி வழங்குவதற்கு முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணத்தால் அவ்வாறு செய்ய முடியாது'' என்று இராணுவம் தெரிவித்ததாக கூறினார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri