இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
