கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட செல்வோருக்கு முக்கிய தகவல்
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கு முக்கிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.
பார்வையிடும் நேரத்தில் மீண்டும் திருத்தம்
அதன்படி பார்வையாளர்களுக்காக தாமரை கோபுரத்தை திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தாமரை கோபுர வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
வார இறுதி நாட்களுக்கான நேர அறிவிப்பு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும்.

குறித்த இரண்டு நாட்களிலும் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam