தாமரை கோபுரத்தின் ஒரு மாத வருமானம் தொடர்பில் வெளியான தகவல்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மொத்த பார்வையாளர்கள்
மேலும் இதனை பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வசதிகள் மூலம் குறித்த வருமானம் கிடைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
முதல் நாள் வருமானம்
பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 15ஆம் திகதி, 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2612 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam