பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றைய பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் 18 வயதுக்கு குறைவு என்று கூறி புகலிடம் கோருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்து வயதை கண்டுபிடிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய பிரித்தானிய அரசாங்கம் பணிகளை ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் சிறுவர்கள் என்று புகலிடம் கோருபவர்களில் மூன்றில் இருவர் உண்மையில் சிறுவர்களா அல்லது போலியான தகவல்களை வழங்குகின்றார்களா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கருத்திற் கொண்டே இந்த நடவடி்ககை எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய, 1,696 கோரிக்கையாளர்களின் இவ்வாறான வழக்குகள் செப்டெம்பர் மாதம் வரை இருந்த ஒருவருட காலப்பகுதியில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் பிரித்தானியாவும் எக்ஸ்றே ஸ்கேன் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவில் வதிவிடம் கோரும் ஒருவர் தனது வயது 18 இற்கு கீழ் உள்ளதென குறிப்பிடும் போது உள்துறை அமைச்சு அதை நம்பவில்லை என்றால் அவருக்கு இவ்வாறான சோதனைகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பரிசோதனை செய்வதற்கான முறைகளை ஆய்வு செய்யவும், அதன் நம்பகத்தன்மை, நெறிமுறை மற்றும் துல்லியதையும் அறிந்துகொள்வதற்காகவும் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
அந்த குழுவில் உள்ள அதிகாரிகள் ஊடாக இந்த வியடம் ஆய்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
you may like this video