வன்னியில் காணி பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல்
வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று (19.04.2025) இடம்பெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள்தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய விடயங்கள்
இச்சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.
குறிப்பாக வன்னிப் பகுதியில் காணிவிடயங்களில் இருக்கின்ற சிக்கல் நிலமைகள் தொடர்பிலும், அபிவிருத்தியுடன் தொடர்பான விடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன்.
அளுநரிடம் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வன்னிப் பகுதி காணிகள் தொடர்பான சிக்கல் நிலமைகள், வன்னி அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

