யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்: பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
அகில இலங்கை கடற்றொழில் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம்(6.6.2026) யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கடற்றொழில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சனைகள், ஏனைய தொழில்சார் அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் இந்திய கடற்றொழிலார்களால் இலங்கை கடற்றொழிலாளர்கள் படுகின்ற துன்பங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக கடற்றொழிலார்களுடன் சந்திப்பு நடாத்துவது குறித்தும் பேசப்பட்டது.
கலந்துரையாடல்
இதில் குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த அமைப்பானது ஸ்தாபிக்கப்பட்டு தேசிய ரீதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் சர்ச்சை..தேர்தல் பிரசார காணொளிக்கும் NPP கட்சிக்கும் தொடர்பு இல்லை! இளங்குமரன் திட்டவட்டம்