தேசிய சபையில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்(Video)
தேசிய சபைக்கு வெளியிலுள்ள இளைஞர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கு உபகுழுக்கள் அமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் பஹீம் தெரிவித்துள்ளார்.
தேசிய சபையின் கன்னி அமர்வு இன்று(29.09.2022) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மீண்டும் இந்த சபையில் வந்து அமர்ந்து கொள்கைகளை வகுப்பது பொருத்தமான விடயமல்ல என்ற எங்களுடைய அபிப்பிராயத்தை சபையில் முன்வைத்துள்ளோம்.
ஏனெனில் அவர்கள் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கின்ற கடமைகளை செய்கின்ற காரணத்தால் தேவை ஏற்படும் போது அவர்களின் துறை சார்ந்த விடயங்களுக்கு மாத்திரம் அழைத்து கொள்ளலாமே ஒழிய நிரந்தரமாக அவர்கள் இந்த சபையில் அங்கம் வகிப்பது நல்லதல்ல.
இதற்கு பதிலாக ஒவ்வொரு துறை சார்ந்த நிபுணர்களும் தேசிய சபைக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட் வேண்டும்.
இதேவேளை தேசிய சபைக்கு வெளியிலுள்ள இளைஞர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கு உபகுழுக்கள் அமைக்கப்படும்.”என கூறியுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
