வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று(24.03.2026) இடம்பெற்ற இந்தக் கூட்டமானது, வராமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இந்தக் கூட்டத்தில், வடமராட்சி வடக்கில் மேற்கொள்ள வேண்டிய வேலை திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கல், போக்குவரத்து, விடயங்கள், மின் விளக்கு பொருத்துதல், திக்கம் பகுதியில் பனங்கள் அடைப்பு நிலையம் அமைத்தல், பனங்கள் அடைத்தலுக்கு மது வரி திணைக்களத்தால் விதிக்கப்பட்ட வரி தொகைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், வல்வெட்டிதுறை பகுதியில் சட்டத்திற்கு முரணாக குறிப்பாக கரையோர பாதுகாப்பு, மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டங்கள், மற்றும் நகர சபை சட்டங்களை மீறியதற்காக அதனை இடித்து அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதே, ச கிராம மட்ட மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam