ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட இதனை தெரிவித்துள்ளார்.
அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% ஆனோர் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எயார்லைன்ஸின் பங்குகள் விற்பனை
2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்திற்காக, விமான சேவையை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, இந்த விமான சேவையை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சரத் கனேகொட குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல வருடங்களாக நட்டத்தை சந்தித்து வந்த நிலையில், அதில் ஒரு பங்குகளை கொள்வனவு செய்யவும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் விலைமனுக்களை கோரியிருந்தது.
இந்த திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51% பங்குகள் அரசாங்கத்திடம் மீதமுள்ள 49% முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
