வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பில் வவுனியாவில் முக்கிய தீர்மானம்
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நேற்று(04.05.2026) நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல் முடிவில் முக்கிய தீர்மானம்
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினுடைய முக்கியத்துவம், வரலாறு, அதனுடைய தாற்பரியம் தொடர்பான விடயங்கள் அனைத்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கலந்துரையாடலின் முடிவில் 11 பேர் கொண்ட ஒரு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
தவத்திரு வேலன் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, அருட்தந்தையர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.


அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan