"இலங்கை தொடர்பில் அமெரிக்க மத்திய வங்கியின் புதிய நகர்வு"
இலங்கை அரசியல்வாதிகள் முதல் வெளிநாட்டு தூதுவர்கள் வரை அனைவரும் ரணிலிடம் சரணாகதி அடைந்த ஒரு தோற்றப்பாடே காணபடுகின்றது என்று இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல்வாதிகள் முதல் வெளிநாடு தூதுவர்கள் வரை அனைவரும் ரணிலிடம் சரணாகதி அடைந்த ஒரு தோற்றப்பாடே காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் ரணிலின் பிரகடன உரையின் போது அனைவரும் அவர்களின் வாய் மொழியை விட உடல் மொழியின் ஊடாக பணிவாகவும் பக்குவமாகவும் அவருடனான அணுகுமுறையை மேற்கொண்டனர். சுமுகமான உறவை பேணுவதற்கே அனைவரும் முயற்சித்தனர்.
ரணிலுக்கு எதிராக வாக்களிப்பதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல் எதிர்க்கட்சி வரை ரணிலின் அரசை ஏற்பதற்கு தயாராகிவிட்டதை தான் பார்க்க முடிந்தது.
இதேவேளை வெளிநாடு விவகாரங்களை பார்க்கும் போது, தாய்வான் விடயத்தில் பிரிந்திருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா என்பன இலங்கை விடயத்தில் சேர்ந்து செயற்படுகின்றன.
இலங்கை தொடர்பில் அமெரிக்க திரைசேரியின் செயலாளர் ஜனத் ஜயல கூறுகையில், “சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கடன் தொடர்பான மறுசீரமைப்பு திட்டங்களில் சீனா கட்டாயம் உள்வாங்க படவேண்டும்”என கூறியுள்ளது.