வரவு செலவுத்திட்ட விவாதம்! நாடாளுமன்றம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
நிதியமைச்சர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் போது, ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றவில்லை என்று உறுதிப்படுத்தப்படும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கே நாடாளுமன்றத்திற்குள் வர அனுமதி வழங்கப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவருக்கு ரெபீட் என்டிஜன் பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சுகாதார பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற பிரதானிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9 மணி முதல் கொரோனா பரிசோதனைக்கான இந்த வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
அத்துடன் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் இரண்டு தடுப்பபூசிகள் பெற்றுக்கொண்டதை உறுதிப்பத்தும் அட்டை அல்லது அதன் பிரதியை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும் எனவும் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.