அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பா தீர்மானங்கள் வெளியாகியுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இடமாற்றங்கள் நடைமுறையாகும் திகதி
இந்த தீர்மானங்களை அரச சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்கள் நடைமுறையாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இடமாற்றங்கள் தொடர்பான மீள் பரிசீலனை
இதன்படி, 2026 வருடாந்த இடமாற்ற உத்தரவுகளைப் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் குறித்த திகதியில் தமது புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அரச சேவை ஆணைக்குழுவினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri