இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.
மின் கட்டணப் பட்டியல்கள்
எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்றும், அந்த கட்டணப்பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான வானிலையால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக இலங்கை மின்சார சபையும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், அது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam