இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையின் வானிலையில் இன்று, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது, பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




