இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம்! புதிய முறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 1,500 ரூபாவிற்கும்,
முச்சக்கர வண்டிகளுக்கு 2,000 ரூபாவிற்கும்,
ஏனைய வாகனங்களுக்கு 7,000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 19, 2022
1) Changes to the last Digit of Number Plate for Fueling - Will be effective from 21st July, Islandwide
0,1,2 - Tuesday & Saturday
3,4,5 - Thursday & Sunday
6,7,8,9 - Monday, Wednesday & Friday
QR Code will be tested @ multiple locations in Colombo 21-24th July.
எரிபொருள் விநியோகிக்கும் நாட்கள்
இதற்கமைய 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 21 முதல் 24 வரையான திகதிகளில் கொழும்பின் பல இடங்களில் எரிபொருள் பெறுவதற்காக QR குறியீடு பரிசோதிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) மாலை 4 மணி நிலவரப்படி 2 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்காக பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் - வெளியான அறிவிப்பு |