தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட செய்தி!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல்களை வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று பத்திரிகையாளர்கள், தேசபந்து தென்னகோன் காணாமல் போனமை தொடர்பாக முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
“தேசபந்து தென்னகோன் தற்போது வீட்டில் மறைந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் டிரான் அலஸின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்களா?
கட்டாய விடுப்பு
அவரை கட்டாய விடுப்பில் அனுப்பவோ அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யவோ அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?
தேசபந்து தென்னகோன் ஒரு துறவி வேடமிட்டு ஒரு கோவிலில் மறைந்திருப்பதாக வந்த தகவல் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளனவா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர்,
பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில், இதுபோன்ற தகவல்கள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
தற்போது தேசபந்து தொடர்பான தகவலுக்கு எந்த பரிசுத்தொகையும் அறிவிக்கப்படவில்லை.
செவ்வந்தியை பற்றிய தகவல்
நீங்கள் செவ்வந்தியைப் பற்றிச் சொன்னால், உங்களுக்கு ஏதாவது பரிசு கிடைக்கும். ஆனால் தேசபந்துவுக்கு அப்படி எதுவும் இல்லை.
எனவே, இதுபோன்ற தகவல்களை பொலிஸாருக்கு தகவல் வழங்குவது உங்கள் அனைவரின் பொறுப்பு.
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களை நான் நம்புகிறேன்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்பமையில் பொலிஸார் இரவும் பகலும் முக்கிய இடங்களைச் சோதனை செய்கிறார்கள்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |