ஜனாதிபதி முகநூலினூடாக பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், எரிவாயு விநியோகங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எரிபொருள் விநியோகம், எரிவாயு வாயு விநியோகம் தொடர்பான முறைகேடு இருந்தால், 0711691691 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தொலைபேசி இலக்கத்துடன் இன்று காலை பல முறை தொடர்பு கொண்ட போதிலும் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் மக்களுக்குப் பிரச்சினைகளைக் கூற தொலைபேசி இலக்கத்தை அறிவித்து, அது சம்பந்தமாக அழைப்புகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காமல் இருப்பதால் என்ன பயன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan