கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல், சீருடைத்துணி குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
அதன்படி, 80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத்துணிகளின் முழுமையான விநியோகம், மே மாதம் 15 ஆம் திகதி வரையில் நிறைவு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவுளை,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், தமிழ்மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகக் கலை உள்ளிட்ட சில பாட விடயதானங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




