கனடாவில் வேலை தேடுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் வெளியிட்டுள்ளார்.
கனடா தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக, அடுத்த மாதம், அதாவது நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல், கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்படும் கட்டுப்பாடு
இதுவரை, முழு நேரக் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது.
International Students: we are temporarily lifting the 20-hour-per-week cap on the number of hours that students in Canada are allowed to work off-campus while class is in session: https://t.co/GW6giiJTaR
— IRCC (@CitImmCanada) October 7, 2022
(thread⬇️) pic.twitter.com/XmE2YPZAIk
இனி, அதாவது, நவம்பர் 15 முதல், அந்த கட்டுப்பாடு கிடையாது. மாணவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
பணியாளர் பற்றாக்குறையால் தடுமாறி வரும் துறைகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கனேடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
International students contribute to our country in so many ways. They enrich our communities, and play a crucial role in growing our economy.
— Sean Fraser (@SeanFraserMP) October 7, 2022
Today, I announced new and important measures to help address the labour shortage and continue to support international students.
? pic.twitter.com/CA65qvv9jL
மேலும், இந்த தற்காலிக நடைமுறைகள், 2023ஆம் ஆண்டு இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.






