அநுராதபுர பேரணி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்றைய(12.09.2026) அநுராதபுர மக்கள் பேரணி குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
அநுராதபுர இராச்சியத்தில் நிகழ்ந்த கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
இலங்கையர்களுக்கு எனது நன்றி..
படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், துரோகங்கள் மட்டுமின்றி வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற ஒரு சரித்திரமாக அது இருந்தது.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது நாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்.
ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.

இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும், நான் எமது தாய் நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன்.
எமது மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம்.
கடந்த காலத்தைப் போன்று, எமது கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, என்னுடைய நீண்ட கால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றி.
எப்போதும் எமக்கு பலமாக இருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நன்றி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்