லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இவ்வாறு எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
30ஆம் திகதிக்குள் வரும் கப்பல்கள்

பண்டிகைக் காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினாலே இவ்வாறு எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் பல எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் பின்னர் வழமை போன்று விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan