தடுப்பூசி அட்டை கட்டாயம்! சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்
சுற்றுலா செல்வோர் கட்டாயம் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமான சுற்றுல மையங்களுக்கு செல்லும் போது பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை வைத்திருப்பது இன்றியமையாதது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சுற்றுலா மையங்களில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களும் சுற்றுலா தளங்களில் ஒன்றுகூட முடியும் என சுகாதார அமைச்சும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri