பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு
பரீட்சை ஊழியர்களுக்கு நாளை (22) எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பரீட்சார்த்திகள் பாடங்கள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு வருவதே பொருத்தமானதாக இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களிலும் பரீட்சார்த்திகளுக்காக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போக்களில் இருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரீட்சை ஊழியர்களுக்கும் தேவையான எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
